5 அக்டோபர் 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் நாளை காலை 7 மணிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் பிரசாரம் செய்யவும், வாக்கு சேகரிக்கவும், கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களை கட்சி வாகனங்களில் அழைத்து வரவோ, வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தவோ கூடாது. வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள்



