5 அக்டோபர் 2026
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தனது காலத்தைவிட முன்னோக்கிப் பார்த்த மனிதர். அதனால்தான் அவரால் தெலுங்கில் முதல் காலப் பயணக் கதையான (Time Travel) ஆதித்யா 369 திரைப்படத்தை உருவாக்க முடிந்தது.
தனது நகைச்சுவை உணர்வைத் தந்தையிடம் இருந்தே பெற்றதாக சிங்கீதம் கூறியுள்ளார். அவரது திரைப்படங்களில் உணர்ச்சியைவிட நகைச்சுவைக்கே அதிக இடமுண்டு. அவரது பேச்சிலும் அதைக் காணலாம்.சோதனை முயற்சிகளை மேற்கொள்வது சிங்கீதத்தின் முதல் படத்தில் இருந்தே ஒரு பழக்கமாக இருந்தது.
1931ஆம் ஆண்டு உதயகிரியில் பிறந்த சிங்கீதத்தின் குடும்பப் பெயரிலேயே பாடலும் இசையும் இடம்பெற்றுள்ளன. அவரது தாய் ஒரு வயலின் கலைஞர். சிறுவயதில் இருந்தே அவருக்கு பாடல்கள் மீதே ஈர்ப்பு இருந்தது.
சென்னையில் (அன்றைய மெட்ராஸ்) படித்துக் கொண்டிருந்த போது, ஹரீந்திரநாத் (சரோஜினி தேவியின் சகோதரர்) அவருக்கு நாடகத்தை கற்றுக் கொடுத்தார். பாடல் எழுதுவதற்கான அறிமுகமும் அவருக்குக் கிடைத்தது.
ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக, நாடக எழுத்தாளராக, பத்திரிகையாளராக பணியாற்றினார். சினிமா மீதான ஆர்வத்தால் அந்த காலத்தில் பிரபல இயக்குநராக இருந்த கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். ‘மாயாபஜார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
தெலுங்கில் 1972-ல் வெளியான ‘நீதி நிஜாயிதி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் அவர் முதன்முதலில் இயக்கிய படம் ‘திக்கற்ற பார்வதி’ 1974-ல் வெளியாகி, தேசிய விருதையும் வென்றது. 54 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து இயங்கியவர்,
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 60 படங்களை இயக்கியிருக்கிறார் சிங்கீதம். தமிழில் கமல்ஹாசன் கூட்டணியில் பல வெற்றி படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.



