சிஎம் சார் பயமா? ஜெயிச்சாலும், தோற்றாலும்… மதுராந்தகத்தில் தொடையை தட்டிய ஸ்டாலின்

Date:

ஜெயிச்சாலும் தோற்றாலும் கெத்தா திமுக கரை வேட்டி கட்டிக் கொண்டு களத்தில் மக்களுக்காக பாடுபடுவோம், மக்கள் கூட இருப்போம், களத்தில் நிற்பவர்கள் நாங்கள் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடையை தட்டி தெரிவித்தார். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, மதுராந்தகம் புறவழிச்சாலையில் நேற்று நடந்த பொதுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை.

உங்கள் மேல் திணிக்கப்பட்ட தேர்தல். 4 மாதங்களுக்கு முன்பு நீங்கள் ஒருவரை ஜெயிக்க வைத்தீர்கள். மெஜாரிட்டி இல்லாத இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு திரும்ப வந்து வெட்கமே இல்லாமல் வேறு சின்னத்தில் வாக்கு கேட்கிறார்கள். 5 ஆண்டுகள் அதுவும் 5 ஆண்டுகளாக அவர் எதுவும் செய்யவில்லை என்ற அவரை வைத்துக் கொண்டே சொல்கிறார் ஆதவ் அர்ஜுனா. அதை சொல்லிவிட்டு அவருக்கே வாக்கு கேட்கிறார். இதைவிட மதுராந்தகம் மக்களான உங்களை கேவலப்படுத்த முடியுமா? தமிழகத்தில் ரிசல்ட் வந்த கையோடு ஒரு எம்எல்ஏ ராஜினாமா பண்ணுவது இதற்கு முன்பு நடந்திருக்கிறதா? இது அப்பட்டமான குதிரை பேரத்தால் இந்தத் தேர்தல் நடக்கிறது. விலைக்கு வாங்கி.. ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளை நம்பாமல் அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, மறுபடியும் அவர்களையே நிற்க வைத்து தவெகவின் சீட் கணக்கை கூட்டப் பார்க்கிறார். உறுதியாக சொல்கிறேன். பல குதிரை பேரங்கள் நடந்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆந்திராவின் 12 மாத சாதனை; தமிழ்நாட்டின் முதலீட்டுக் கணக்கு: தொழில் வளர்ச்சியில் வேகம் யாருக்கு?

முதலீட்டு ஒப்பந்தங்களா முக்கியம்? தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்குவதா? தமிழ்நாடு–ஆந்திரப் போட்டி எழுப்பும்...